• No products in the basket.

தொடர் வகைகள் – Samcheer Questions with Answer

பயிலுக

பின்வரும் தொடர்களை எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் எனப் பிரிக்க.

1. வீரர்கள் நாட்டைக் காத்தனர்.

2. பொதுமக்கள் அந்நியத்துணிகளைத் தீயிட்டு எரித்தனர்.

3. கொற்கைத் துறைமுகத்திலே பாண்டியனுடைய மீனக்கொடி பறந்தது.

4. திருக்குறளை எழுதியவர் யார்?

5. கபிலர் குறிஞ்சிப்பாட்டை எழுதிய புலவர்.


 

எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் அமையும்படி ஐந்து தொடர்களை எழுதுக.

விடை : சிறுவன் மிதிவண்டியை ஓட்டினான்.

மன்னர் நல்லமுறையில் நாட்டை ஆண்டார்.

குழந்தை பழத்தைத் தின்றது.

மாணவர்கள் பாடத்தைப் படித்தனர்.

ஓவியர் ஓவியத்தை வரைந்தார்.

பின்வரும் தொடர்களில் மூவிடப் பெயர்களை அடிக்கோடிடுக. அவற்றை வகைப்படுத்துக.

1. எங்கள் வீட்டு நாய்க்குட்டி ஓடியது.

2. இவர்தான் உங்கள் ஆசிரியர்.

3. நீர் கூறுவது எனக்குப் புரியவில்லை.

4. எனக்கு, அது வந்ததா என்று தெரியவில்லை. நீயே கூறு.

5. உங்களோடு நானும் உணவு உண்ணலாமா?

விடை :


 

கொடுக்கப்பட்டுள்ள தொடர்களின் வகையைக் கண்டறிந்து எழுதுக.

1. முக்காலமும் உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள்.

2. கடமையைச் செய்.

3. பாரதியார் பாடல்களின் இனிமைதான் என்னே!

4. நீ எத்தனை புத்தகங்களைப் படித்திருக்கிறாய்?

விடை : 1. செய்தித்தொடர் 2. விழைவுத்தொடர் 3. உணர்ச்சித் தொடர் 4. வினாத்தொடர்

தொடர்களை மாற்றுக.

(எ.கா) நேற்று நம் ஊரில் மழை பெய்தது. (வினாத்தொடராக மாற்றுக.)

நேற்று நம் ஊரில் மழை பெய்ததா?

1. காடு மிகவும் அழகானது. (உணர்ச்சித் தொடராக மாற்றுக.)

2. அந்தோ! பூனையின் காலில் அடிபட்டுவிட்டதே! (செய்தித்தொடராக மாற்றுக.)

3. அதிகாலையில் துயில் எழுவது நல்லது. (விழைவுத் தொடராக மாற்றுக.)

4. முகில்கள் திரண்டால் மழை பெய்யும் அல்லவா? (செய்தித்தொடராக மாற்றுக.)

5. காட்டில் புலி நடமாட்டம் உள்ளது. (வினாத்தொடராக மாற்றுக.)

விடை : 1. ஆ! காட்டின் அழகுதான் என்னே !

2. பூனையின் காலில் அடிபட்டுவிட்டது.

3. அதிகாலையில் துயில் எழு.

4. முகில்கள் திரண்டால் மழை பெய்யும்.

5. காட்டில் புலி நடமாட்டம் உள்ளதா?

இரண்டு தொடர்களை ஒரே தொடராக்குக.

(எ.கா.) முத்து நன்கு படித்தான். முத்து வாழ்வில் உயர்ந்தான்.

முத்து நன்கு படித்ததால் வாழ்வில் உயர்ந்தான்.

1. மழை நன்கு பெய்தது. எங்களால் விளையாட முடியவில்லை.

2. எனக்குப் பால் வேண்டும். எனக்குப் பழம் வேண்டும்.

3. திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகக் கருதப்படுபவர். அவர் பதினெண் சித்தர்களில் ஒருவராகக் கருதப்படுபவர்.

4. அறநெறிகளைக் கூறும் நூல்களைக் கற்க வேண்டும். அவை கூறும் கருத்துகளைப் பின்பற்ற வேண்டும்.

5. குணங்குடி மஸ்தான் சாகிபு எக்காளக்கண்ணி நூலை இயற்றியுள்ளார். நந்தீசுவரக் கண்ணி நூலை இயற்றியுள்ளார்.

விடை : 1. மழை நன்கு பெய்ததால் எங்களால் விளையாட முடியவில்லை.

2. எனக்குப் பாலும் பழமும் வேண்டும்.

3. திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும், பதினெண் சித்தர்களில் ஒருவராகவும் கருதப்படுபவர்.

4. அறநெறிகளைக் கூறும் நூல்களைக் கற்கவும் அவை கூறும் கருத்துகளைப் பின்பற்றவும் வேண்டும்.

5. குணங்குடி மஸ்தான் சாகிபு எக்காளக்கண்ணி, நந்தீசுவரக்கண்ணி ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன – இது எவ்வகைத் தொடர்?

அ) வினாத்தொடர் ஆ) கட்டளைத்தொடர் இ) செய்தித்தொடர்  ஈ) உணர்ச்சித்தொடர்

விடை : இ) செய்தித்தொடர்

வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக.

1. கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறார். அவரை அழைத்து வாருங்கள்.

2. ஊட்டமிகு உணவு உண்டார். அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

3. நேற்று என்னைச் சந்தித்தார். அவர் என் நண்பர்.

4. பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தார். போட்டித் தேர்வில் வென்றார்.

எ.கா. கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறவரை அழைத்து வாருங்கள்.

குறிப்புகளைக் கொண்டு வினாவிலேயே விடை இருப்பது போன்று வினாத்தொடர்கள் அமைக்க.

குறிப்புகள் : குறளின்பம், சுவைக்காத இளநீர், காப்பியச் சுவை, மனிதகுல மேன்மை, விடுமுறைநாள்

எ.கா. குறளின்பத்தில் திளைக்காத தமிழன் உண்டா?

விடை : சுவைக்காத இளநீர் : மன்னன் சுவைக்காத இளநீர் உண்டோ ?

காப்பியச் சுவை : கம்பர் காலத்தில் காப்பியச் சுவை உச்சநிலையில் இருந்ததோ?

மனிதகுல மேன்மை : இந்நூற்றாண்டில் மனிதகுல மேன்மை சிறப்புற்று விளங்குகிறதோ?

விடுமுறைநாள் : தேரோட்டம் அன்று விடுமுறை நாள் என அறிவிக்கப்படுமா?

சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க. இன்சொல், எழுகதிர், கீரிபாம்பு, பூங்குழல் வந்தாள், மலை வாழ்வார், முத்துப்பல்

எ.கா. இன்சொல் – பண்புத்தொகை – இன்சொல் கூறுதல் சான்றோர்க்கு அழகு.

விடை : 1. எழுகதிர் – வினைத்தொகை

மனித வாழ்க்கை எழுகதிர் போன்றது.

2. கீரிபாம்பு – உம்மைத்தொகை

கலாவும் மாலாவும் கீரியும் பாம்பும் போல எப்பொழுதும் பகைமையோடு வாழ்கின்றனர்.

3. பூங்குழல் வந்தாள் – அன்மொழித்தொகை

பூ போன்ற கூந்தலையுடைய (குழல்) பெண் வந்தாள்

4. மலை வாழ்வார் – ஏழாம் வேற்றுமைத் தொகை

குறிஞ்சி நில மக்கள் மலையின் கண் வாழ்வார்.

5. முத்துப்பல் – உவமைத்தொகை

மாலாவின் முத்துப்பல் மேலும் அவளுக்கு அழகு சேர்க்கிறது.

 

TNPSC Books

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.